Home / உலகச் செய்திகள் / 100 பில்லியன் யூரோ கொரோனா மீட்பு திட்டம்; பிரான்ஸ் பிரதமர்!

100 பில்லியன் யூரோ கொரோனா மீட்பு திட்டம்; பிரான்ஸ் பிரதமர்!

பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் 2021 ஆம் ஆண்டில் 1,60,000 வேலைகளை உருவாக்கும் நோக்கத்துடன் 100 பில்லியன் யூரோ கொரோனா மீட்பு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறார்.
இரண்டு ஆண்டுகளில் அதாவது 2022 ஆண்டிற்குள் கொரோனா வைரஸ் நெருக்கடியால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கத்திலிருந்து மீண்டெழ பிரான்ஸ் அரசாங்கம் தனது 100 பில்லியன் யூரோ திட்டத்தை (03/09/2020) வியாழக்கிழமை விவரித்தது.
எதிர்காலத் தொழில்துறைகளில் முதலீடு செய்வது மற்றும் வேலை இழப்புகளைத் தடுப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.
இந்த திட்டத்தில் மூன்றிற்கு முன்னுரிமைகள் அளிக்கப்படவுள்ளன.
அவை பசுமை போக்குவரத்து மற்றும் வீட்டுவசதிகளில் கவனம் செலுத்துதல், தொழில்துறையை மிகவும் போட்டிக்கு உட்படுத்துதல் மற்றும் சமூக மற்றும் பிராந்திய ஒற்றுமையை ஊக்குவித்தல் ஆகும்.
ஐரோப்பியாவில் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடாக திகழும் பிரான்சின் தொழில்துறையை மிகவும் போட்டித்தன்மையடையச் செய்வதற்கு இந்த திட்டம் குறிப்பாக 35 பில்லியன் யூரோக்களை ஒதுக்குகிறது,
சுற்றுச்சூழல் நட்பு சக்திகளுக்கு 30 பில்லியன் யூரோ மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு 25 பில்லியன் யூரோ ஒதுக்கப்படுகிறது.

About VITHUSHA

x

Check Also

பிரான்ஸில் கொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம் மேலதிக தகவல்

பிரான்ஸில் நேற்று இலங்கை குடும்பம் ஒன்று அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. Noisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் ...