Home / விளையாட்டுச் செய்திகள் / ஹோப்மன் கிண்ண டென்னிஸ் தொடரை வெற்றி பெற்றது ஸ்பெயின் அணி

ஹோப்மன் கிண்ண டென்னிஸ் தொடரை வெற்றி பெற்றது ஸ்பெயின் அணி

அவுஸ்ரேலியாவில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஹோப்மன் கிண்ண டென்னிஸ் தொடரின் குழு A பிரிவின் போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி வெற்றி பெற்றுள்ளது.

8 நாடுகள் பங்கேற்கும் இத்தொடரில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் வீர வீராங்கனைகள் மோதிக்கொண்டனர்.

இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டிகளை ஸ்பெயின் அணி வெற்றி பெற்று 2-0 என முன்னிலை பெற்றிருந்தது.

இதன் பின்னர் இடம்பெற்ற கலப்பு இரட்டையர் பிரிவில் அலிசா கோர்னெட்/லூகாஸ் பியூலி ஜோடி மற்றும் டேவிட் பெர்ரார்/ விட்னி ஒசுவிகுவே ஆகியோர் மோதினர். இதில் கார்பினே முகுருசாவிற்கு பதிலாக விட்னி ஒசுவிகுவே போட்டியிட்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற குறித்த இந்த போட்டியில் 4-2 4-2 என இரு செட்களையும் இலகுவாக அலிசா கோர்னெட்/லூகாஸ் பியூலி ஜோடி கைப்பற்றி வெற்றி பெற்றது.

இருப்பினும் இதற்க்கு முன்னர் இடம்பெற்ற இரு போட்டிகளிலும் தேல்வியை தழுவியதால் குறித்த தொடரை பிரான்ஸ் அணி இழந்திருந்தது.

மேலும் இந்நிலையில் ஸ்பெயின் அணி 2-1 என்ற அடிப்படையில் குறித்த தொடரை கைப்பற்றியுள்ளது. மேலும் இந்த தொடருக்கான இறுதி போட்டி இன்றைய தினம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

About அகமுகிலன்

x

Check Also

கிரிக்கெட் போட்டி ஏலத்தில் வாய்ப்பை இழந்த லசித் மாலிங்க

இங்கிலாந்து கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 100 பந்துகளை கொண்ட கிரிக்கெட் போட்டி ஏலத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து ...

%d bloggers like this: