Home / உலகச் செய்திகள் / ஹூவாவி (Huawei) நிறுவனத்திற்கு எதிரான நகர்வுகளுக்குக் கண்டனம் வெளியிட்டுள்ள-ரென் ஷெங்பி

ஹூவாவி (Huawei) நிறுவனத்திற்கு எதிரான நகர்வுகளுக்குக் கண்டனம் வெளியிட்டுள்ள-ரென் ஷெங்பி

ஹுவாவேயின் நிறுவனர் ரென் ஷெங்பி தனது நிறுவனத்திற்கு எதிரான அமெரிக்க நகர்வுகளுக்குக் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

ஹுவாவேயின் திறன்களை அமேரிக்கா குறைத்து மதிப்பிடுவதாகக் கூறியுள்ளார்.

சீன அரச ஊடகத்தில் உரையாற்றிய ரென் சமீபத்திய அமெரிக்க தடைகளின் தாக்கத்தை அலட்சியம் செய்த நிலையில் எதிர்காலத்தில் தமது 5ஜி தொழில்நுட்பத்தை எவரும் எட்டிப் பிடிக்க முடியாது என சூளுரைத்துள்ளார்.

கடந்த வாரம், அமெரிக்க நிறுவனங்கள் அனுமதிப்பத்திரம் இல்லாது வர்த்தகம் செய்யமுடியாத நிறுவனங்களின் பட்டியலில் அமெரிக்கா ஹுவாவேயையும் இணைத்துகொண்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது சீன நிறுவனத்துடனான வர்த்தகத்தைத் தடுக்கும் அமெரிக்காவின் முயற்சி தீவிரமடைந்துள்ளமையை எடுத்துக்காட்டுகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ஸ்பெயின் நாட்டில் 3,200 ஆண்டுகளுக்கு முந்தைய வாள் கண்டுபிடிப்பு!!

ஸ்பெயின் நாட்டில் 3 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட வாள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மஜோர்க்கா மற்றும் மெனோர்க்கா என்ற ...

%d bloggers like this: