Home / உலகச் செய்திகள் / ஸ்பெயினில் தீவிரவாத தாக்குதல் சூத்திரதாரி சுட்டு கொலை

ஸ்பெயினில் தீவிரவாத தாக்குதல் சூத்திரதாரி சுட்டு கொலை

ஸ்பெயினின் பார்சலோனாவில் கோர்னெல்லா பகுதியில் உள்ள காவல்நிலையம் ஒன்றின் மீது தாக்குதலை நடத்த முயன்ற இஸ்லாமிய அடிப்படைவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அல்லா அக்பர் என கத்தியபடி மேற்படிநபர் காவல் அதிகாரிகளை கூரிய ஆயுதமொன்றால் தாக்கமுயன்றவேளையில் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர் 29 வயதான அல்ஜீரியர் என தற்போது அறிவிக்கபட்டுள்ளது. இதற்கிடையே வட ஸ்பெயினில் உள்ள கசெத்தா நகரில் பாதசாரிகள் மீது வாகனம் ஒன்று மோதவைக்கபட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் மூவர் காயமடைந்தனர். வாகனத்தின் சாரதி தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது. கடந்த வருடம் இதே மாதத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பார்சலோனாவில் நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லபட்டு 100 பேருக்குமேல் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

About இனியவன்

x

Check Also

2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த- எம்.பி. பெர்னி சாண்டர்ஸ்

2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக எம்.பி. பெர்னி சாண்டர்ஸ் அறிவித்துள்ளார். தமது சொந்த ஊரான வெர்மான்ட் Vermont ...

%d bloggers like this: