Home / விளையாட்டுச் செய்திகள் / ஷிகர் தவண் ரொம்ப நல்ல மனுஷன்: அஸ்வின் உருக்கம்

ஷிகர் தவண் ரொம்ப நல்ல மனுஷன்: அஸ்வின் உருக்கம்

ஷிகர் தவண்  நல்ல மனிதர் என்றும் அதனால்தான் அவருக்கு நல்ல விஷயங்கள் நடக்கின்றன என்றும் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஜென் நெக்ஸ்ட் கிரிக்கெட் அகாடமியின் விழாவில் கலந்துகொண்டார் அஸ்வின். அப்போது வீரர் ஷிகர் தவணின் விலகல் இந்திய அணிக்கு என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அஸ்வின், ”முதலில் ஷிகர் தவண் நல்ல மனிதர். அதனால்தான் அவருக்கு நல்ல விஷயங்கள் நடக்கின்றன. அவர் நல்ல வீரரும்கூட. அவருடைய உத்வேகமான ஆட்டத்தை இந்தியா நிச்சயம் மிஸ் செய்யும்.

நிறைய வீரர்கள் இருக்கின்றனர். ராகுல் நன்றாக ஃபிட்-இன் செய்வார் என்று நினைக்கிறேன். நம் ஊரைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், விஜய்சங்கர் ஆகியோர் உள்ளனர். யார் யார் விளையாடுவார்கள் என்று தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக இந்தியா எல்லாவற்றையும் மீறி வரும். இந்திய அணி நிச்சயமாக உலகக்கோப்பையை வென்று சாதனை படைக்கும்.

இறுதிப் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து ஆகிய நாடுகள் இருக்கும் என்று நினைக்கிறேன். உலகக்கோப்பையில் முக்கியமான தேவை, அழுத்தத்தைச் சரியாகக் கையாள்வதுதான். இந்தியா அதை சரியாகச் செய்யும் என நம்புகிறேன். ஸ்பின்னர்கள், ஃபாஸ்ட் பவுலர்கள் என்று எல்லோரின் பங்கும் உலகக்கோப்பையில் முக்கியமானதாக இருக்கும். ஜஸ்பிரித் பும்ரா முக்கியப் பங்கு வகிப்பார், இந்தியா நிச்சயம் கோப்பையைக் கைப்பற்றும்” என்றார் அஸ்வின்.

அதிரடி ஆட்டக்காரரான ஷிகர் தவண், எலும்பு முறிவு காரணமாக அடுத்த நியூஸிலாந்துக்கு எதிரான போட்டி மற்றும் ஞாயிறன்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி ஆகியவற்றில் ஆடமாட்டார் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

About இனியவன்

x

Check Also

தோனியின் ரன் அவுட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த இருவர் மாரடைப்பால் பலி!!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் தோனியின் ரன் அவுட்டை பார்த்து, அதிர்ச்சியடைந்த கிரிக்கெட் ரசிகர் ஒருவர் மாரடைப்பால் ...

%d bloggers like this: