Home / உலகச் செய்திகள் / வௌிநாட்டைச் சேர்ந்த இரு குழுக்களால் சைபர் தாக்குதல் முன்னெடுப்பு!!

வௌிநாட்டைச் சேர்ந்த இரு குழுக்களால் சைபர் தாக்குதல் முன்னெடுப்பு!!

நாட்டின் இணையத்தளங்கள் மீது அண்மையில் இடம்பெற்ற சைபர் தாக்குதலானது, வௌிநாட்டைச் சேர்ந்த இரு குழுக்களால் முன்னெடுக்கப்பட்டதாக, தகவல்கள் வௌியாகியுள்ளன.

கடந்த 18ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலானது ஒரு குழுவினராலும் 19ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலானது மற்றுமொரு வௌிநாட்டுக் குழுவினராலும் மேற்கொள்ளப்பட்டதாக, கணினி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு சைபர் தாக்குதலுக்கு உள்ளான இணையத்தளங்களில் 99 வீதமானவை, வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஒன்றியத்தின் நிறைவேற்று அதிகாரி லால் டயஸ் குறிப்பிட்டுள்ளார்.

சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதனூடாக எவ்விதத் தரவுகளையும் தாக்குதல்தாரர்களுக்கு பெற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சைபர் தாக்குதல் இடம்பெறக்கூடும் என ஏற்கனவே தகவல்கள் கிடைத்திருந்ததாகவும் லால் டயஸ் கூறியுள்ளார்.

அதேநேரம், அரசாங்கத்தின் இணையத்தங்களைப் பாதுகாப்பது தொடர்பில் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, கணினி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரக இணைத்தளம் உள்ளிட்ட 13 இணையத்தளங்கள் அண்மையில் சைபர் தாக்குதலுக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

உலக நாடுகள் உதவ வேண்டும்-பிரதமர் இம்ரான்கான்

காஷ்மீரில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் நீங்குவதற்கு சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கை ...

%d bloggers like this: