Home / உள்நாட்டு செய்திகள் / வைத்தியசாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு…!!

வைத்தியசாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு…!!

யாழ். அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை ஊழியர்கள் இன்று 05 காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் கடமை புரியும் வைத்தியர் ஒருவர், நோயாளர் ஒருவரின் உறவினர்களால் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் இன்று  காலை பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

ஊழியர்கள் தமது கைகளில் கறுப்புப் பட்டியணிந்து தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருவதாக எமது ரேடியோ தமிழா செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பணிப்பகிஷ்கரிப்பினால் வௌிநோயாளர் பிரிவு, மாதாந்த சிகிச்சைகள், பற்சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளின் நடவடிக்கைகளும் ஸதம்பிதமடைந்துள்ளன.

வயோதிபர் ஒருவர் நேற்றைய தினம் வைத்தியசாலையில் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து யாழ். அச்சுவேலி வைத்தியசாலையில் பதற்றமான சூழல் நிலவியுள்ளது.

புத்தூர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் மூச்சுத்திணறல் காரணமாக அச்சுவேலி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

நீண்ட நேரமாக காத்திருந்தமையால் அவரின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததை அடுத்து கோபமடைந்த அவரது உறவினர்கள் வைத்தியரைத் தாக்க முற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டதாக எமது ரேடியோ தமிழா செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

தேர்தல் ஆணையாளரின் அதிரடி அறிவிப்பு

தேர்தல் பிரச்சார காலத்தினுள் விகாரையில் அல்லது புனித தலத்தில்  தேர்தல் கூட்டத்தை நடத்தினால் அந்த வேட்பாளர் வெற்றிப்பெற்றாலும் அந்த வெற்றியை ...

%d bloggers like this: