Home / சினிமா செய்திகள் / வெளியானது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படம்

வெளியானது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ திரைப்படம் வரும் 10 ஆம் திகதி உலகம் முழுவதும் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியாகவுள்ளது.

மேலும் ‘பேட்ட’ திரைப்படம் வசூலில் பல சாதனைகளை முறியடிக்கும் என கருதப்படுகிறது.

இந்நிலையில் ‘பேட்ட’ படத்தை அடுத்து பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக செய்தி ஏற்கனவே வெளியானது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் பெப்ரவரியில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இப்படத்திற்கு சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவாளராக பணிபுரிவார் என தெரிகிறது. இவர் ஏற்கனவே முருகதாஸ் இயக்கிய ‘துப்பாக்கி’, ‘ஸ்பைடர்’ படங்களுக்கும் ரஜினிகாந்த் நடித்த ‘தளபதி’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பேட்ட படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் இதற்கும் இவரே இசையமைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

About அகமுகிலன்

x

Check Also

யாரும் அறிந்திடாத நடிகர் அஜித்குமார் பற்றிய சுவாரஸ்யமான விடயங்கள்

57 படம் 38 வெற்றி, 19 படம் தோல்வி, 3 கார் ரேஸ் வின்னர், 12 பைக் ரேஸ் வின்னர், ...

%d bloggers like this: