Home / உள்நாட்டு செய்திகள் / வெளிநாட்டில் இருந்து கல்விப் பொதுத்தராதர பரீட்சைகளை எழுதுவதற்கு அனுமதி?

வெளிநாட்டில் இருந்து கல்விப் பொதுத்தராதர பரீட்சைகளை எழுதுவதற்கு அனுமதி?

வெளிநாடுகளில் வசிக்கின்ற இலங்கையர்களது பிள்ளைகள், கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளை அவர்கள் வசிக்கும் நாடுகளில் இருந்து எழுதுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

இதற்கான பொறிமுறையை உருவாக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், பரீட்சைகள் திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி அவர்கள் வசிக்கின்ற நாடுகளில் உள்ள இலங்கையின் ராஜதந்திர அலுவலகத்தில் இந்த பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கான ஏற்பாட்டை மேற்கொள்ள தாம் அறிவுறுத்தி இருப்பதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

 

About இனியவன்

x

Check Also

இறுதித் தேர்தல் முடிவு 4.00 மணிக்குள்-மஹிந்த தேசபிரியா

தேசிய தேர்தல் ஆணையம் இறுதித் தேர்தல் முடிவை இன்று (நவம்பர் 17) மாலை 3.00 / 4.00 மணிக்குள் வெளியிடும் ...

%d bloggers like this: