Home / சினிமா செய்திகள் / ‘வெண்ணிலா கபடிகுழு 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

‘வெண்ணிலா கபடிகுழு 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சுசீந்திரனின் மூலக்கதையில் உருவாகியுள்ள ‘வெண்ணிலா கபடிகுழு 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

சுசீந்திரன், விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான படம் ‘வெண்ணிலா கபடிகுழு’. விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் 2-வது பாகம் தற்போது உருவாகியுள்ளது.

இதன் மூலக்கதையை இயக்குநர் சுசீந்திரன் உருவாக்கியுள்ளார். செல்வசேகரன் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ராந்த், சூரி, கிஷோர், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏனென்றால் ‘வெண்ணிலா கபடிகுழு’ கதைப்படி விஷ்ணு விஷால் இறந்துவிடுவார் என்பதால், இதில் விக்ராந்த் நாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறன. தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஜூன் வெளியீடு என்று உறுதிப்படுத்தியுள்ளது படக்குழு.

‘வெண்ணிலா கபடிகுழு’ படத்தின் 2-ம் பாகம் என்பதால், படக்குழுவினருக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்

About இனியவன்

x

Check Also

மீண்டும் திரைப்படங்களில் குஷ்பூ!!

நடிகை குஷ்பூ, அரசியலில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்த பின்னர், திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். திரைப்படங்களில் நடிக்கலாமா வேண்டாமா என ...

%d bloggers like this: