Home / உள்நாட்டு செய்திகள் / வெசாக் தின நிகழ்வுகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பு-ருவண் குணசேகர

வெசாக் தின நிகழ்வுகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பு-ருவண் குணசேகர

வெசாக் தின நிகழ்வுகள் நிமித்தம், தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காவற்துறை அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடத்தை போல இந்த வருடமும் வெசாக் தின நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து சில நாட்களுக்கு அமுல்படுத்தப்படும்.

இதனிடையே, கொழும்பு உள்ளிட்ட நகர பகுதிகளுக்கு பிரவேசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக நடமாடும் காவற்துறை சேவைகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!!

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய் சப்ரகமுவ ...

%d bloggers like this: