Home / உள்நாட்டு செய்திகள் / வெசாக்கூடுகளை காட்சிப்படுத்துவதற்கு பொலிஸார் தடை-வீதியில் தீயிட்டு கொளுத்திய இளைஞர்கள்!!

வெசாக்கூடுகளை காட்சிப்படுத்துவதற்கு பொலிஸார் தடை-வீதியில் தீயிட்டு கொளுத்திய இளைஞர்கள்!!

புத்தளம், சாலியவௌ பிரதேசத்தில் இளைஞர் குழுவால் தயாரிக்கப்பட்டிருந்த வெசாக்கூடுகளை காட்சிப்படுத்துவதற்கு பொலிஸார் அனுமதியளிக்காமையால், வெசாக்கூடுகளை இளைஞர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

சாலியவௌ பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாலை பௌத்த மற்றும் கத்தோலிக்க இளைஞர்கள் இணைந்து 500 வெசாக்கூடுகள் அடங்கிய தொகுதியொன்றை தயார் செய்திருந்தனர்.

அவற்றில் ஒருபுறம் பௌத்தர்களின் சின்னமும் மறுபுறம் கத்தோலிக்கர்களின் சிலுவை சின்னமும் பொறிக்கப்பட்டமையால் அங்கு முறுகல் நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து வெசாக்கூடுகளை காட்சிப்படுத்துவதற்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து இளைஞர்கள், தாம் தயாரித்த வெசாக்கூடுகளை வீதியில் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை…!!

சப்ரகமுவ, தென், மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் எதிர்வரும் 25ஆம் திகதி வரை 200 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி ...

%d bloggers like this: