Home / சினிமா செய்திகள் / விஷாலுக்கும் தமிழ் தமிழ்ராக்கர்ஸ்க்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என சக்தி வாசன் சந்தேகம்!

விஷாலுக்கும் தமிழ் தமிழ்ராக்கர்ஸ்க்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என சக்தி வாசன் சந்தேகம்!

தமிழ் ராக்கர்ஸ் விவகாரத்தில் நடிகர் விஷாலை காவல்துறை விசாரிக்க வேண்டும் என தயாரிப்பாளர் சக்தி வாசன் மனு அளித்துள்ளார்.

ராஜா ரங்குஸ்கி படத்தின் தயாரிப்பாளர் சக்தி வாசன், சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு காவல்துறையிடம் அளித்துள்ள புகார் மனுவில், தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தை நடத்திவருபவர்கள் யார் என்பது தனக்கு தெரியும் எனவும் இன்னும் இரண்டு வாரங்களில் அவர்கள் யார் என்பதை அறிவிக்க உள்ளதாக நடிகர் விஷால் கடந்த 2017ஆம் ஆண்டு கூறியிருந்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் இதுநாள் வரை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை நடத்துபவர்கள் யார் என்று தெரிவிக்கத காரணத்தினால், விஷாலுக்கும் தமிழ் தமிழ்ராக்கர்ஸ்க்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்னும் சந்தேகம் தனக்கு இருப்பதாகவும் எனவே விஷாலிடம் இந்த விடயம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் சக்திவாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

About அகமுகிலன்

x

Check Also

‘அந்தாதுன்’ தமிழ் ரீமேக்கில் தனுஷ் ?

ஹிந்தியில் கடந்த ஆண்டு வெளிவந்து பெரும் வரவேற்பையும், வெற்றியையும் பெற்ற படம் ‘அந்தாதுன்’. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தபு, ஆயுஷ்மான் ...

%d bloggers like this: