Home / உள்நாட்டு செய்திகள் / விவசாய புரட்சிக்கு வித்திடும் புதிய திட்டம் – தரிசு நிலங்களை இலக்குவைக்கும் அரசாங்கம்..!

விவசாய புரட்சிக்கு வித்திடும் புதிய திட்டம் – தரிசு நிலங்களை இலக்குவைக்கும் அரசாங்கம்..!

பெரும்போகத்துக்காக பசளையை தட்டுப்பாடு இன்றி விநியோகிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அரசாங்கம் எதிர்காலத்தை இலக்காகக் கொண்டு பாரிய விவசாய புரட்சியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதற்காக நாட்டில் தரிசு நிலங்களாக இருக்ககூடிய பாரிய நிலங்களை உள்வாங்கி பல ஆண்டுகளுக்கு பிறகு நாட்டில் நெல் உள்ளிட்ட பெரும்போக பயிர்களை மீண்டும் பயிரிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ள பசளைகளுக்கான கொடுப்பனவுகள் முறையாக செலுத்தப்பட்டுள்ள நிலையில், பெருந்தோட்ட மற்றும் பெரும்போக விவசாயிகளுக்கு தேவையான பசளைகளை உரிய நேரத்தில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

பசளை உற்பத்தி மற்று விநியோகம் தொடர்பான அமைச்சுடன், அதன் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆராயும் விசேட கூட்டத்திலேயே அவர் இத9னக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் விவசாய துறையை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி விசேட செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும், பசளை தேவையைகருத்தில் கொண்டு, அவசியமான பசளையை தடையின்றி இறக்குமதி செய்வதற்கு அரச மற்றும் தனியார் துறையினருக்கு முறையான பின்னணி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இறக்குமதி பசளையில் தொடர்ந்தும் தங்கியிராது, நாட்டிற்கு தேவையான பசளையை தயாரிப்பதற்கும் நடவடிக்கை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு பதிலளித்த பெசில் ராஜபக்ஸ, ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஆராய்சி நிறுவனங்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், நாட்டுக்கு பொருத்தமான பசளைகளை எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்

இதேவேளை, நாட்டில் பெரும்போகத்திற்காக பயன்படுத்தப்பட்டும் இராசாயண பசளை பாவனையை இந்த ஆண்டுக்குள் 25 வீதத்தினால் குறைக்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

About இனியவன்

x

Check Also

மேலும் 17 பேர் நாட்டை வந்தடைந்தனர்

மேலும் 17 பேர் இலங்கை வந்தடைந்தனர்…! அபுதாபியிலிருந்து 5 பேரும், கட்டாரிலிருந்து 12 பேரும் என, 17 பேர் இன்று ...