Home / உள்நாட்டு செய்திகள் / விளையாட்டு உபகரணங்கள் எதுவுமின்றி பயிற்சிகளை மேற்கொண்டு பதக்கங்களை வென்ற மாணவர்கள்..!!

விளையாட்டு உபகரணங்கள் எதுவுமின்றி பயிற்சிகளை மேற்கொண்டு பதக்கங்களை வென்ற மாணவர்கள்..!!

யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரி மாணவர்கள் ஐவர் 30.08.2019 நடைபெற்ற யாழ் மாவட்ட திறந்த பளுதூக்கும் போட்டியில் தங்கம் வெள்ளி வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர்.

இப் பாடசாலையில் பளுதூக்கும் விளையாட்டு உபகரணங்கள் எதுவுமின்றி யாழ் துரையப்பா உள்ளக விளையாட்டரங்கில் வெறும் 6 நாட்கள் பயிற்சிகளை மேற்கொண்டு மூவர் பதக்கங்களை வென்றுள்ளனர்…

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

ஜெசின் 112kg எடையை தூக்கி முதலாம் இடத்தையும் சோபனா 65kg எடையை தூக்கி இரண்டாம் இடத்தையும் வைஷாலி 50kg எடையை தூக்கி மூன்றாம் இடத்தையும் பிரசாத்,பிரணவன் முறையே 108kg 110kg எடையை தூக்கி ஐந்தாம் ஆறாம் இடத்தினை பெற்றுக் கொண்டனர். இவர்களுக்கு பயிற்சிகளை வழங்கியவர் உ.வினோத்குமார் ஆவார்.

மேலும் வட மாகாணத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 350விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களில் இவரே பாடசாலையில் இல்லாத ஒரு விளையாட்டை உருவாக்கி திறந்த மாவட்ட ரீதியிலான போட்டியில் மாணவர்களை பதக்கங்களை சுவீகரிக்க செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

புதிய ஜனாதிபதியின் பெயர் நாளை மாலை அறிவிக்கப்படும் மகிந்த தேசப்பிரிய

புதிய ஜனாதிபதியின் பெயர் நாளை மாலை அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அத்துடன், உத்தியோகபூர்வ ...

%d bloggers like this: