Home / விளையாட்டுச் செய்திகள் / விராட் கோலிக்கு பின்னடைவு- ரபாடா முதலிடம்..!

விராட் கோலிக்கு பின்னடைவு- ரபாடா முதலிடம்..!

இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்றது. இதில் இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதல் இன்னிங்சில் 209 ரன்கள் எடுத்த இந்தியா, 2-வது இன்னிங்சில் 135 ரன்னில் சுருண்டது. முதல் இன்னிங்சில் 5 ரன்கள் எடுத்த விராட் கோலி, 2-வது இன்னிங்சில் 28 ரன்கள் ஆட்டமிழந்தார். இதனால் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு பின் தங்கியுள்ளார். சிட்னி டெஸ்டில் அரைசதம் அடித்த ஜோ ரூட் 4-வது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

புஜாரா 3-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு வீழ்ந்துள்ளார். நியூசிலாந்து பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் 4-வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்மித் 947 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்குத் தள்ளி ரபாடா முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவிற்கு எதிராக முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டும் வீழ்த்தியதே இதற்கு காரணம். ஜடேஜா 3-வது இடத்திலும், அஸ்வின் 4-வது இடத்திலும் உள்ளனர்.

About கலைப்பிரியன்

x

Check Also

கிரிக்கெட் போட்டி ஏலத்தில் வாய்ப்பை இழந்த லசித் மாலிங்க

இங்கிலாந்து கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 100 பந்துகளை கொண்ட கிரிக்கெட் போட்டி ஏலத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து ...

%d bloggers like this: