இலங்கைக்கும் கொச்சினுக்கும் இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 11 ஆம் திகதி வரை விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
கேரளாவில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக அங்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் கொச்சின் விமான நிலையத்தின் செயற்பாடுகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்த அறிவிப்பின் பிரகாரம் இலங்கையிலிருந்து கொச்சினுக்கு பயணிக்கும் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அனைவருக்கும் பகிருங்கள்!
மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்
Facebook-LIKE