Home / உள்நாட்டு செய்திகள் / விபத்தால் பிரதான வீதியூடான போக்குவரத்து இரு மணித்தியாலங்கள் தடை

விபத்தால் பிரதான வீதியூடான போக்குவரத்து இரு மணித்தியாலங்கள் தடை

திருகோணமலை – ஹொரவபொத்தானை பிரதான வீதியின் நொச்சிக்குளம் பகுதியில் மரக்குற்றிகளை ஏற்றி சென்ற லொறியொன்று இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

சீமெந்து தொழிற்சாலைக்கு மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற லொறியின் முன் டயரில் காற்று போனதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

விபத்தினால் லொறி நடுவீதியில் புரண்டு கிடந்த நிலையில் இரண்டு மணித்தியாலங்கள் வரை குறித்த பிரதான வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் விபத்து தொடர்பில் மொறவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About இனியவன்

x

Check Also

பாராளுமன்றை கூட்டியமைக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத்தாக்கல்!!! 7 நிமிடங்களுக்குள் நடந்ததென்ன? (Video)

கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஏகமனதான தீர்மானத்திற்கு அமைவாக பாராளுமன்ற அமர்வானது எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ...

%d bloggers like this: