Home / உள்நாட்டு செய்திகள் / வித்தியா கொலை: குற்றவாளிகளின் மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்குட்படுத்த தீர்மானம்

வித்தியா கொலை: குற்றவாளிகளின் மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்குட்படுத்த தீர்மானம்

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவை கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தி கொலை செய்தமை தொடர்பில் மரணதண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மேன்முறையீட்டு மனு எதிர்வரும் டிசெம்பர் மாதம் 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் யாழ். மேல் நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினால் குற்றவாளிகள் 7 பேருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது.

வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதியாகயிருந்த பாலேந்திரன் சசிமகேந்திரன், யாழ். மேல்நீதிமன்ற நீதிபதியாக செயற்பட்ட மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோர் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.

மேலும், 30 வருடங்களுக்கும் குறையாத சிறைத்தண்டனையும் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் தாயாருக்கு தலா 10 இலட்சம் ரூபா இழப்பீடு செலுத்த வேண்டும் எனவும் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.

தலா 40,000 ரூபா அபராதம் செலுத்த வேண்டும் என 5 குற்றவாளிகளுக்கும் தலா 70,000 ரூபா அபராதம் செலுத்த வேண்டும் என ஏனைய இரண்டு குற்றவாளிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தீர்ப்பு கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினால் தமக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையையும் அபராதத் தொகையையும் இரத்து செய்து உத்தரவிடுமாறு கோரி குற்றவாளிகள் 7 பேரினால் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

About இனியவன்

x

Check Also

இலங்கையைச் சூழ்ந்துள்ள சிவப்பு வளையம்! அவசர எச்சரிக்கை!!

இலங்கையில் கடும் காற்று மற்றும் மழையுடனான காலநிலை இன்றும் தொடரும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பில் திணைக்களம் ...

%d bloggers like this: