Home / அறிவியல் CITY / விண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்!

விண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தற்போது பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்டை வரும் 16ம் தேதி விண்ணில் ஏவுவதற்காக இறுதி பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் பி.எஸ்.எல்.வி – சி42 ராக்கெட் நிலைநிறுத் தப்பட்டு இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த ராக்கெட்டில் 800 முதல் 1,000 கிலோ எடைகொண்ட பூமி கண்காணிப்பு செயற்கைகோகள் செலுத்தப்பட உள்ளனத. பூமி கண்காணிப்புக்காக வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோள் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தது.

நோவாசார் மற்றும் எஸ்-41 என பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி42 ராக்கெட் மூலம் புவி வட்டப் பாதையில் இருந்து 583 கி.மீ தூரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

இந்த செயற்கைக்கோள்கள், புவி அமைப்பு, காலநிலை, நில மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து படம் பிடித்து அனுப்பும். மேலும், பேரிடர் காலங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

About Tharshi

x

Check Also

நாடாளுமன்றத்தை மைத்திரிபால சிறிசேன கலைத்திருப்பது ஜனநாயகப் படுகொலை திமுக ஸ்டாலின்

இலங்கை நாடாளுமன்றத்தை மைத்திரிபால சிறிசேன கலைத்திருப்பது ஜனநாயக பச்சைப்படுகொலை” என திமுக தலைவர் ஸ்டாலின் காட்டம் இலங்கை பிரதமராக இருந்த ...

%d bloggers like this: