Home / உள்நாட்டு செய்திகள் / விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட நாளே தனது வாழ்வில் முக்கியமான நாள் முத்தையா முரளிதரன்

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட நாளே தனது வாழ்வில் முக்கியமான நாள் முத்தையா முரளிதரன்

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட நாளே தனது வாழ்வில் முக்கியமான நாள் என நாள் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

சமாதான பேச்சுக்களின் போது விடுதலைப் புலிகளிற்கு நல்ல வாய்ப்புக்கள் வந்த போதும் அவர்கள் மக்களை கொன்றதகவும் முரளி கூறியுள்ளார்.

நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார். அத்துடன் கிரிக்கெட் வீரர்களோ, ஏனைய துறைசார் வல்லனர்களோ நாட்டிற்கு தலைமை தாங்க முடியாது என கூறிய அவர்,

மக்களின் பிரச்சினைகளை அரசியல் அனுபவம் உள்ள அரசியல் ரீதியில் முடிவெடுக்க கூடிய ஒருவராலேயே தீர்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையில் சில விடயங்களை சாதித்த, மக்களை பாதுகாக்க கூடிய ஒருவரிற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் இதன் போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தனது சகோதரனின் வர்த்தக நடவடிக்கைகளைப் பாதுகாப்பதற்காக முன்னாள் இராணுவ பாதுகாப்பு செயலாளருக்கு வெள்ளையடிக்க முயலும் முரளியின் முயற்சியை தமிழ் ஆதரவாளர்கள் அருவருப்புடன் நோக்குகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

About Radio tamizha

x

Check Also

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 64 பேருக்கு இடமாற்றம்…!!

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 64 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் ...

%d bloggers like this: