Home / இந்திய செய்திகள் / விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடித்துள்ள இந்தியா!!

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடித்துள்ள இந்தியா!!

புதுடில்லி: விடுதலை புலிகள் அமைப்பு மீது விதிக்கப்பட்ட தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடியது விடுதலை புலிகள் அமைப்பு. இந்த அமைப்பு, இந்தியா, ஐரோப்பிய யூனியன் இலங்கை போன்ற நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடையும் விதித்தது. குறிப்பாக இந்தியா, தமிழகத்தில் இதன் ஆதரவு அமைப்புகள் பெருக விடாமல் தடுக்க கடும் நடவடிக்கைள் எடுக்கப்பட்டன.
ஏற்கனவே இருக்கும் இந்த தடை இப்போது மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அரசின் இந்த உத்தரவில் ; தமிழகத்தில் விடுதலை புலிகள் ஆதரவை பெருக்க முயற்சிகள் நடக்கின்றன. விடுதலைப் புலிகள் ஆதரவு இயக்கங்கள் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சியை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன. இதனால் வரும் 2024-ஆம் ஆண்டு வரை ஊபா (Unlawful Activities (Prevention) Act- UAPA) சட்டத்தின் கீழ் விடுதலை புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ஆயுள் தண்டனை பெற்ற ராஜகோபால் உடனடியாக சரணடைய உத்தரவு!!

ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் சரவணபவன் ராஜகோபால் உடனடியாக சரணடைய உத்தரவு ஆயுள் தண்டனை பெற்ற ராஜகோபால் உடனடியாக சரண் ...

%d bloggers like this: