Home / சினிமா செய்திகள் / விஜய் நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள திரைப்படத்தில் நயன்தாரா

விஜய் நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள திரைப்படத்தில் நயன்தாரா

இளைய தளபதி விஜய் நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள திரைப்படம் விஜய் 63 இந்த திரைப்படத்தை அட்லீ இயக்கவுள்ளார்.

இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே தெறி, மெர்சல் படங்கள் வெளிவந்து வெற்றியடைந்தன.

விஜய்யின் 63வது திரைப்படமான இந்த திரைப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

இந்த திரைப்படத்தில் இளைய தளபதி விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க. ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவில், ஏ.ஜி.எஸ். என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் தயாரிக்கிறது.

இதன் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாகியுள்ளது.

இதில் விஜய், அட்லி மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் விவேக், ஆனந்தராஜ், பரியேறும் பெருமாள் கதிர் ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

பூஜையில் டேனியல் பாலாஜி பங்கேற்றார். எனவே அவர் வில்லனாக நடிப்பார் என்று தெரிகிறது.

2 கதாநாயகிகள் படத்தில் நடிக்க இருப்பதாகவும் இதற்காக கீர்த்தி சுரேஷ், ஆத்மிகா ஆகியோரிடம் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படம் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து தயாராவதாக தகவல் கசிந்துள்ளது.

இதில் விஜய் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி முடித்து தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

 

About அகமுகிலன்

x

Check Also

பிரபல இயக்குநர் மகேந்திரன் இன்று காலை காலமானார்.

பிரபல திரைப்பட இயக்குனர் மகேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழ் ...

%d bloggers like this: