Home / உள்நாட்டு செய்திகள் / வாய்க்காலில் வீசப்பட்டிருந்த புத்தர் சிலைகளினால் கடும் எதிர்ப்பு!!

வாய்க்காலில் வீசப்பட்டிருந்த புத்தர் சிலைகளினால் கடும் எதிர்ப்பு!!

வாய்க்காலில் வீசப்பட்டிருந்த புத்தர் சிலைகள் சிலவற்றைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கொழும்பு இராஜகிரியவில் 12 புத்தர் சிலைகள் மீட்கப்பட்டன என பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டர் சைக்கிளில் வந்த சிலர் புத்தர் சிலைகளை அங்கு வீசி விட்டுச் சென்றதை நேரில் பார்த்தவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை அறிந்த பிக்குமாரும் அந்தப் பகுதிக்குச் சென்றமையால் அங்கு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

இதுவொரு திட்டமிட்ட இனவாத செயல் என்றும் இந்த நாசகார வேலையில் ஈடுபட்ட இனவாதிகளை உடனடியாக கைது செய்யுமாறும் தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நாரஹேன்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

மரண தண்டனை தொடர்பில் மகிந்தவின் தெரிவித்துள்ள கருத்து..!!

மரண தண்டனை அவ்வாறே பேணப்படும் என்ற போதும், அது நடைமுறைப்படுத்தப்படக்கூடாது என்றும் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எமது ...

%d bloggers like this: