Home / தொழில்நுட்ப செய்திகள் / ‘வாட்ஸ் ஆப்’ தகவலை திருட முயற்சி-உடனே, ‘அப்டேட்’ செய்யும்படியும்அறிவுறுத்தல்!!

‘வாட்ஸ் ஆப்’ தகவலை திருட முயற்சி-உடனே, ‘அப்டேட்’ செய்யும்படியும்அறிவுறுத்தல்!!

சான் பிரான்சிஸ்கோ: ‘வாட்ஸ் ஆப்’ சமூக வலைதளத்தில், ‘ஹேக்கர்ஸ்’ எனப்படும், இணைய உளவாளிகள் ஊடுருவி, தகவல்களை திருட முயற்சிப்பதாகவும், இதை தவிர்க்க, பயனாளிகள், உடனடியாக, செயலியை, ‘அப்டேட்’ செய்யும்படியும், அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.

‘வாட்ஸ் ஆப்’ எனப்படும் தகவல் பரிமாற்ற சமூக வலைதளத்தை, உலகம் முழுவதும், 150 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலி வாயிலாக, தகவல்கள், புகைப்படங்கள், ‘வீடியோ’ ஆகியவை பகிரப்பட்டு வருகின்றன.
பயனாளர்கள்

மேலும், இதில் உள்ள, ‘வாய்ஸ் காலிங்’ வசதி மூலம், உலகின் எந்த மூலையில் இருப்பவரையும் தொடர்பு கொண்டு, கட்டணமின்றி பேசவும் முடியும். அதிக பயனாளர்களை உடைய செயலி என்பதால், இதில் ஊடுருவி, பயனாளிகளின் தகவல்களை திருட, ‘ஹேக்கர்கள்’ எனப்படும் இணைய உளவாளிகள் அடிக்கடி முயற்சி செய்து வருகின்றனர். எனவே, இந்த செயலியின் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்வதில், இந்நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

இந்த நிலையில், வாட்ஸ் ஆப் செயலிக்குள் ஊடுருவ, சிலர் முயன்றதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற, திறமை வாய்ந்த இணைய உளவாளிகளை வைத்து, சில குறிப்பிட்ட பயனாளர்களின் செயலியை ஊடுருவும் முயற்சி நடந்துள்ளதை கண்டுபிடித்துள்ளோம். யாருடைய கணக்குகள் ஊடுருவப்பட வேண்டுமோ, அவர்களின், ‘மொபைல் போன்களுக்கு, ‘வாட்ஸ் ஆப் காலிங்’ வசதி மூலம், இணைய உளவாளிகள் அழைப்பு விடுக்கின்றனர்.

பதிவிறக்கம்

அழைப்பை ஏற்றவுடன், அந்த, மொபைல் போனில், உளவு மென்பொருள் தானாகவே பதிவிறக்கம் ஆகிறது. இதையடுத்து, அந்த குறிப்பிட்ட எண்ணை, இணைய உளவாளிகள் கண்காணிக்க துவங்குகின்றனர். அவரது மொபைல் போனில் உள்ள தகவல்கள் அனைத்தும் திருடப்படுகின்றன. அவரது, அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. இதை தடுக்க, நவீன பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய, ‘அப்டேட்’கள் வந்துள்ளன. உடனடியாக ‘ப்ளே ஸ்டோர்’ சென்று, வாட்ஸ் ஆப் செயலியை, பயனாளர்கள், அப்டேட் செய்து கொள்வதன் மூலம், இந்த ஊடுருவலில் இருந்து தப்ப முடியும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

சுருங்கும் சந்திரனின் மேற்பரப்பு! விஞ்ஞானிகள் தகவல்

அடிக்கடி நிலநடுக்கங்கள் மற்றும் நில அதிர்வுகள் ஏற்படுவதால் சந்திரனின் மேற்பரப்பு சுருங்குகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் நாசா விண்வெளி ...

%d bloggers like this: