Home / தொழில்நுட்ப செய்திகள் / வாட்ஸ்ஆப் (WhatsApp) டேட்டாவை தர மறுத்ததற்காக பேஸ்புக் நிறுவனத்திற்கு அபராதம்!!

வாட்ஸ்ஆப் (WhatsApp) டேட்டாவை தர மறுத்ததற்காக பேஸ்புக் நிறுவனத்திற்கு அபராதம்!!

போலீஸ் விசாரணைக்கு வாட்ஸ்ஆப் டேட்டாவை தர மறுத்ததற்காக பேஸ்புக் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை பிரேசில் நீதிமன்றம் குறைத்துள்ளது.

போதை பொருள் கடத்தல் கும்பல் குறித்த விசாரணைக்காக அதிகாரிகளிடம் வாட்ஸ்ஆப் டேட்டாவை தர மறுத்தது தொடர்பாக வாட்ஸ்ஆப் செயலியை நிர்வகித்து வரும் பேஸ்புக் நிறுவனத்திற்கு கடந்த 2017ஆம் ஆண்டு பிரேசில் நீதிமன்றம் 528 மில்லியன் டாலர் அபராதம் விதித்தது. அதன் இந்திய மதிப்பு 3 ஆயிரத்து 653 கோடி ரூபாய்க்கும் மேலாகும்.

இதனை எதிர்த்து பேஸ்புக் நிறுவனம் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், அந்நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை 6 மில்லியன் டாலராக குறைத்து பிரேசில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன் இந்திய மதிப்பு கிட்டதட்ட 41 கோடியே 51 லட்சம் ரூபாயாகும். பிரேசில் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு வாட்ஸ்ஆப் வரவேற்பு அளித்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ஆயிரக்கணக்கான போலி கணக்குகளை நீக்கம்…!!

உலகம் முழுவதும், செயல் பட்டு  வந்த ஆயிரக்கணக்கான போலி கணக்குகளை நீக்கி உள்ளதாக டுவிட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது. டுவிட்டரில் சமீப ...

%d bloggers like this: