Home / உள்நாட்டு செய்திகள் / வவுனியா விக்ஸ்காடு கிராமத்தில்- வீடுகளுக்கு அடிக்கல்!!

வவுனியா விக்ஸ்காடு கிராமத்தில்- வீடுகளுக்கு அடிக்கல்!!

வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட விக்ஸ்காடு கிராமத்தில் வீட்டுத் திட்டங்களுக்கான அடிக்கல் நேற்றைய தினம் நடப்பட்டது.

“எல்லோருக்கும் வீடு’ எனும் தொனிப்பொருளில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வவுனியா மாவட்ட முகாமையாளர் குரூஸ் தலைமையில் வீடுகளுக்கு அடிக்கல் நடப்பட்டது.

இந்த நிகழ்வில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை உதவி மாவட்ட முகாமையாளர், நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், உதவி பொறியியலாளர் மற்றும் பிரதேச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், இராசேந்திரகுள கிராம சேவையாளர், ஸ்ரீரேலோ கட்சியின் இளைஞர் அணித் தலைவர்  பரமேஸ்வரன் கார்த்தீபன், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

அனைத்து ரயில் சேவை நடவடிக்கைகளும் இடை நிறுத்தம்!!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களினால் அனைத்து தொடருந்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தபடுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை இந்த ...

%d bloggers like this: