Home / உள்நாட்டு செய்திகள் / வவுனியா வசந்தி சினிமா திரையரங்கில் அடிதடி சம்பவத்தில் பலர் காயம்

வவுனியா வசந்தி சினிமா திரையரங்கில் அடிதடி சம்பவத்தில் பலர் காயம்

வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள வசந்தி சினிமா திரையரங்கில் நேற்று இரவு இடம் பெற்ற அடிதடியில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளார்கள்.

மேலும் சம்பவம்  தொடர்பாக

அஜித் நடிப்பில் வெளி வந்துள்ள விஸ்வாசம் படத்தை காண்பதற்காக நேற்று இரவு 9 மணியளவில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வவுனியா வசந்தி திரையரங்கிற்கு முன்பாக ஒன்று கூடியிருந்தனர்.

திரைப்படத்தை காண்பதற்கான நுளைவுசீட்டை கொள்வனவு செய்வதற்காக வரிசையில் நின்ற இளைஞர்களிற்கிடையில் இடிபாடுகள் ஏற்பட்டது. அது வாக்குவாதமாக உருவெடுத்து அடிதடியாக மாறி குறித்த சம்பவத்தில் சினிமா பாணியில் மது போத்தல்கள், தலைகவசங்களால் குழுக்களாக பிரிந்து  இளைஞர்கள் அடிதடியில் இறங்கினர்.

இதனால் கண்டிவீதியின் போக்குவரத்து சிறிது நேரம் பாதிப்படைந்திருந்தது.சம்பவத்தில் பலர் காயமடைந்தபோதும் ஒருவரே வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார்.

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

வவுனியா விபுலானந்தா கல்லூரி இரு மாணவர்கள் ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்

வவுனியாஈரப்பெரியகுளத்தில் மூழ்கி  இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இரட்டபெரியகுளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தைப்பொங்கள் தினத்தை முன்னிட்டு தமது பொழுதைக் கழிக்க ஐந்து ...

%d bloggers like this: