Home / உள்நாட்டு செய்திகள் / வவுனியா – தோணிக்கல் ஆலடிப் பகுதிக்கு மக்களை செல்ல வேண்டாம் என பொலிஸார் அவசர அறிவுறுத்தல்

வவுனியா – தோணிக்கல் ஆலடிப் பகுதிக்கு மக்களை செல்ல வேண்டாம் என பொலிஸார் அவசர அறிவுறுத்தல்

வவுனியா – தோணிக்கல் ஆலடிப்பகுதியில் வசிக்கும் குடும்பமொன்றினை அண்மையில் சந்தித்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து குறித்த குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆலடிப்பகுதியில் வசிக்கும் குடும்பமொன்றினை அண்மையில் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்ணொருவர் சந்தித்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து அவர் வவுனியாவில் சந்தித்த குடும்பத்தினர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த பகுதிக்கு மக்களை செல்ல வேண்டாம் என பொலிஸார் அவசர அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

தோணிக்கல் ஆலடிப்பகுதியில் புகையிரத கடவைக்கு அருகாமையில் சிறிய கடையொன்றினை நடத்தி வரும் குடும்பமொன்றே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனையும் இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Radio tamizha

x

Check Also

ஊரடங்கு சட்டத்தினை மீறிய மேலும் 125 பேர் கைது!

பொலிஸ் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ...