Home / உள்நாட்டு செய்திகள் / வவுனியா குடாகச்சகொடி காட்டுப்பகுதியில் ஆயுதங்கள் மீட்பு!!

வவுனியா குடாகச்சகொடி காட்டுப்பகுதியில் ஆயுதங்கள் மீட்பு!!

வவுனியா ஹொரவப்பொத்தானை வீதி மடுக்கந்தை குடாகச்சகொடி காட்டுப்பகுதியிலிருந்து பல ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை விஷேட அதிரடிப்படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

குடாகச்சகொடி காட்டுப்பகுதியில் மரக்கடத்தல் , மண் அகழ்வுகளை தடுக்கும் நோக்கில் மடுக்கந்தை விஷேட அதிரடிப்படையினர் விஷேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன் போது காட்டுப்பகுதியிலிருந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை விஷேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.

எம்.பி.என்.ஜி ரக துப்பாக்கி – 59 , மோட்டர் துப்பாக்கி – 1 , 356 ரக துப்பாக்கி – 5 , எல்.எம்.ஜி – 1 , எச்.கே7 துப்பாக்கி – 2 , 60மில்லி மீற்றர் மோட்டார் – 1 , 356 ரக மேகசின் – 4 ஆகியவற்றை மீட்டெடுத்த விஷேட அதிரடிப்படையினர் அவற்றை வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மீட்கப்பட்ட ஆயுதங்கள் விடுதலைப்புலிகளுடையதா? என்ற விசாரணை இடம்பெற்று வருவதுடன் மீட்கப்பட்ட ஆயுதங்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது!!

மன்னாரில் உருமலையில் 24 காலை திகதி நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கொண்ட ...

%d bloggers like this: