Home / உள்நாட்டு செய்திகள் / வவுனியாவில் முதற் தடவையாக இறப்பர் உற்பத்தி வெற்றிகரம்!

வவுனியாவில் முதற் தடவையாக இறப்பர் உற்பத்தி வெற்றிகரம்!

வடமாகாணத்தில் முதற் தடவையாக வவுனியாவில் 8 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட இறப்பர் உற்பத்தி திட்டத்தில், அதன் கொள்வனவு நடவடிக்கைகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பெருந் தோட்ட பயிர்ச் செய்கை அமைச்சின் செயலாளர் கருணந்த கொள்வனவு நடவடிக்கையை இன்று ஆரம்பித்து வைத்தார்.

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையின் ஏற்பாட்டில் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் நெடுங்குளம் பகுதியில் சுமார் 8 ஏக்கரில் பரப்பளவில் சமத் நந்திக்க என்ற தனிநபரால் இந்த இறப்பர் உற்பத்தி திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வில் இறப்பர் செய்கையின் பணிப்பாளர் நாயகம் ஆர். வி. பிரேமதாசா, வவுனியா தெற்கு சிங்களப்பிரதேச செயலாளர் ஆர். ஜானக, தோட்டத் தொழில் அமைச்சின் செயலாளர் ஜே.ஏ. ரஞ்சன, வவுனியா மாவட்ட மேலதிக செயலர் திரு. த. திரேஸ்குமார் இறப்பர் உற்பத்தி பயிர்ச் செய்கை உத்தியோகத்தர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.

 

About அகமுகிலன்

x

Check Also

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 215 ஆக அதிகரிப்பு-சந்தேகத்தின் பேரில் 07 பேர் இதுவரை கைது

தொடர் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 07 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். தெமட்டகொட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் ...

%d bloggers like this: