Home / உள்நாட்டு செய்திகள் / வவுனியாவில் மிக சிறப்பாக இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டம்!

வவுனியாவில் மிக சிறப்பாக இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டம்!

இலங்கையின் 71ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று காலை 09.00 மணிக்கு இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா உள்ளிட்ட அதிதிகள் அழைத்து வரப்பட்டு நகரசபை மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த விசேட இடத்தில் தேசியக் கொடியினை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஏற்றி வைத்திருந்தார்.

பின்னர் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதமும் அதன் பின்னர் பாடசாலை மாணவர்கள், படையினரின் அணிவகுப்பு மரியாதையும் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பொலிஸ் அதிகாரிகள், கடற்ப்படை, விமானப்படை, சிவில் பாதுகாப்பு படை, இராணுவ அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், சர்வ மதத்தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

படைப்புழுவை கட்டுப்படுத்த மன்­னார் மாவட்டத்­தில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு!!

மன்­னார் மாவட்டத்­தில் படைப்­பு­ழு­வைக் கட்­டுப்­ப­டுத்­து­தல் தொடர்­பான கருத்­த­ரங்கு  மாவட்ட செய­ல­கத்­தின் கேட்­போர் கூடத்­தில் மாவட்ட செய­லர் சி.ஏ. மோகன்­றாஸ் தலை­மை­யில் ...

%d bloggers like this: