Home / உள்நாட்டு செய்திகள் / வவுனியாவில் ஒரு வருட காலமாக அதிபர் இல்லாமல் இயங்கும் பாடசாலை

வவுனியாவில் ஒரு வருட காலமாக அதிபர் இல்லாமல் இயங்கும் பாடசாலை

வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட எல்லை கிராமமான கோவில் புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலத்திற்கு கடந்த ஒரு வருடாமாக காலமாக அதிபர் நியமிக்கபடவில்லை என்று தெரிவித்து பெற்றேர்கள், பழைய மாணவர்கள் நேற்றய தினம் வவுனியா வடக்கு வலய கல்விபணிப்பாளருக்கு மகயர் ஒன்றை கையளித்துள்ளனர்.

மேலும் குறித்த மகயரில் கடந்த ஒரு வருடமாக எமது பாடசாலைக்கு அதிபர் நியமிக்கபடவில்லை எனவும் முன்னர் கடமையாற்றிய அதிபர் இடமாற்றம் பெற்று சென்றிருந்தாலும் அவரது கட்டுப்பாட்டிலேயே பாடசாலை தற்போதும் இயங்கிவருவதாக பாடசாலை சமூகம் கூறுகின்றது. தற்போது பாடசாலைக்கு பொறுப்பாக இருக்கும் ஆசிரியர் பாடசாலையின் மாணவர்களையோ, உபகரணங்களையோ சரியான முறையில் கவனிப்பதில்லை எனவும்  பாடசாலையின் சிற்றுழியர், காவலாளி போன்றோர் உரிய முறையில் தமது கடமைகளை மேற்கொள்வதில்லை.

மேலும் பாடசாலையின் ஆசிரியர்கள் இரு பிரிவாக செயற்பட்டு வருகின்றனர். எமது பாசாலை பின் தங்கிய பகுதியில் காணப்பட்டாலும் கடந்த காலங்களில் பல்வேறு துறைகளிலும் வெற்றி நடைபோட்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே தற்போது அதில் வீழ்சி ஏற்பட்டுள்ளது.

இவை அனைத்திற்கும் காரணம் பாடசாலைக்கு நிரந்தரமான அதிபர் ஒருவர் இல்லாமையே என்பதை எம்மால் ஊகிக்க முடிகின்றது. குறித்தவிடயம் தொடர்பாக உரிய அதிகாரிகளிற்கு பலமுறைதெரிவித்தும் நடவடிக்கைஎடுக்கப்படவில்லை.

வலயகல்வி பணிப்பாளர் எமக்கு ஒரு வாரத்திற்குள் நல்ல தீர்வு வழங்காவிட்டால் நாம் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று அந்த மகயரில் தெரிவிக்கபட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக தனது மேலதிகாரிகளிற்கு தெரியபடுத்தவுள்ளதாக வவுனியா வடக்கின் வலயகல்வி பணிப்பாளர் சு. அன்னமலர் தெரிவித்தார்.

 

About அகமுகிலன்

x

Check Also

வெலிகந்த – அசேலபுர பகுதியில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதி விபத்து..!!

மட்டக்களப்பு மற்றும் கொழும்பிற்கு இடையிலான ரயில் மார்க்கத்தின் அசேலபுர பிரதேசத்தில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதியுள்ளன. ரயில் என்ஜினில் அகப்பட்டு ...

%d bloggers like this: