Home / உள்நாட்டு செய்திகள் / வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

கரையோர பிராந்தியங்களில் காற்றின் வேகம் இன்று முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை அதிகரித்து வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்தோடு மணிக்கு 50 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

மேலும் கடற்றொழில் ஈடுபடுபவர்கள், கடல் பயணங்களை மேற்கொள்பவர்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்பதோடு, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் விசேடமாக  பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

About அகமுகிலன்

x

Check Also

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 215 ஆக அதிகரிப்பு-சந்தேகத்தின் பேரில் 07 பேர் இதுவரை கைது

தொடர் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 07 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். தெமட்டகொட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் ...

%d bloggers like this: