Home / உலகச் செய்திகள் / வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக புலம்பெயர் தமிழர்கள் கவனயீர்ப்பு நிகழ்வு!!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக புலம்பெயர் தமிழர்கள் கவனயீர்ப்பு நிகழ்வு!!

தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக புலம்பெயர் தமிழர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளான ஆகஸ்ட் 30 ஆம் திகதி அணிதிரள தயாராகி வருகின்றனர்.

குறித்த தினத்தில் தமிழர் தாயகத்தில் ஐந்து இடங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இப்போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில், இப்போராட்டங்களை புலம்பெயர் தேசங்களில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்கிணைத்து வருகின்றது.

அமெரிக்கா,கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெறுவது மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும் இடம்பெறுகின்றது.

1 – France Trocadéro (துறோக்கட்றோ) மனித உரிமைச் சதுக்கத்தில் மாலை 16 மணி முதல் 18:30 மணி வரை

2 – Canada 11am to 4 pm : Dundas Square. toronto 18h pm to 9h pm Milliken Mills Community Centre, North Hall, 7600 Kennedy Rd, (between Denison and 14th Ave) Markham, ON L3R 9S5

3 – UK 12h30 pm to 4h pm North Terrace, Trafalgar Square, Lonodon

4 – Germany Herzog Christoph Denkmal platz Stuttgart Stadmitte

5 : USA 10h am to 12 am National Press Club Floor 13 , Murrow Room, 529 14th NW. Washington Dc 20045

6 : Australia – Sydney

7 am to 9 am sydney main railway station

உலகிலேயே மிக அதிகமானவர்கள் காணாமற்போனவர்களின் நாடுகளில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது என ஐ.நாவின் புள்ளிவிபரம் ஒன்று கூறுகிறது. அதாவது இலங்கைத் தீவில் காணாமலாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு என்ன நிலை என்பது கேள்விக்குறியாக உள்ளது.

வெள்ளை வான்களிலும், சுற்றிவளைப்புக்களிலும், காவலரண்களிலும், விசாரணைக் கைதுகளிலும் என பலரும் காணமலாக்கப்பட்டுள்ளனர் என்பது மட்டுமல்லாது, போரின் இறுதி நாட்களில் படையினரிடம் தங்களை ஒப்படைத்தவர்கள், உறவினர்களால் ஒப்படைக்கப்பட்டவர்கள் என தமிழர்கள் யாவருமே காணாமலாக்கப்பட்டவர்களாக உள்ளனர். இதற்கான நீதியைத் வேண்டியே காணமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒயாது போராடி வருகின்றனர்.

இந்நிலையில் ஆகஸ்ட் 30 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளையொட்டில் தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

மேலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான இணையத்தளம் : http://youarenotforgotten.org/ என்பதும் குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

சரண் அடைய வேண்டும் அல்லது சாகும் வரை போரிட வேண்டும்-இம்ரான்

இந்தியாவுடன் வழக்கமான முறையில் போர் நடந்ததால் பாகிஸ்தான் தோற்றுப் போக நேரிடும் என கூறியுள்ள அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், ...

%d bloggers like this: