Home / உள்நாட்டு செய்திகள் / வறட்சி காரணமாக நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டது

வறட்சி காரணமாக நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டது

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
வறட்சி காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீரை விநியோகிக்கும் பிரதான நீர்த்தேக்கங்களில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயர்நிலப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படுவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

About VITHUSHA

x

Check Also

கிளிநொச்சியில் மறைத்து வைத்திருந்த வாள்கள்

கிளிநொச்சி- பளை, முல்லையடி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மூன்று வாள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. ஏ9 வீதிக்கு அருகாமையில், மின்சார ...