Home / உள்நாட்டு செய்திகள் / வரும் நாட்களில் இலங்கையில் அடைமழைக்கு வாய்ப்பு..!

வரும் நாட்களில் இலங்கையில் அடைமழைக்கு வாய்ப்பு..!

இலங்கையில் அடுத்து வரும் இரு தினங்களில் காலநிலையில் மாற்றம் ஏற்படவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய நாளை மற்றும் நாளை மறுதினம் இலங்கையின் பல பாகங்களில் மழையுடன் கூடிய காலநிலையில் அதிகரிப்பு ஏற்படும். பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும், களுத்துறை மாவட்டத்தின் பல இடங்களிலும் 150 மில்லிமீற்றர் வரையிலான கடும் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் மேல், வடமேல் மற்றும் வட மத்திய மாகாணத்திலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் 100 மில்லி மீற்றர் வரை மழை பெய்யக் கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பிரதேசங்களில் 75 மில்லி மீற்றர் வரையில் மழை பெய்யும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும். அத்துடன் மின்னலினால் ஏற்பட கூடிய ஆபத்துக்களை குறைத்து கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

About கலைப்பிரியன்

x

Check Also

RADIOTAMIZHA |ஊரடங்குச் சட்டத்தை மீறிய 173 பேர் கல்முனையில் கைது

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் சட்டத்தை மீறிய பல்வேறுபட்ட குற்றச்சாட்டில் கல்முனை பொலிஸாரால் இதுவரை 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

%d bloggers like this: