Home / விளையாட்டுச் செய்திகள் / வரலாற்று சாதனையை நிகழ்த்திய- இலங்கை அணி

வரலாற்று சாதனையை நிகழ்த்திய- இலங்கை அணி

தென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில்  வெற்றி பெற்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது

வெற்றி பெறுவதற்கு 197 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி குசல்மென்டிஸ் புதிய இளம் வீரர் ஒசாட பெர்ணான்டோவின் அபாரமான துடுப்பாட்டம் காரணமாக இரண்டு விக்கெட்களை மாத்திரம் இழந்து தனது  இலக்கை அடைந்துள்ளது.

குசல்மென்டிஸ் ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களை பெற்று  அவருடன்  இணைந்து விளையாடிய ஒசாட பெர்ணான்டோ  தனது முதல் அரை சதத்தை பூர்த்தி செய்ததுடன் ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களை பெற்றார்.

இலங்கை அணி இந்த வெற்றியின் மூலம் தென்னாபிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்ற ஒரெயொரு ஆசிய அணி என்ற வரலாற்று சாதனையை நிலைநாட்டியுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About அகமுகிலன்

x

Check Also

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய முகாமையாளராக அசந்த டி மெல் நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய  முகாமையாளராக, தெரிவுக் குழுவின் தலைவர் அசந்த டி மெல் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ...

%d bloggers like this: