Home / உலகச் செய்திகள் / வரலாற்றில் முதன் முறையாக நீண்ட தண்டனை பெறும் குற்றவாளி!

வரலாற்றில் முதன் முறையாக நீண்ட தண்டனை பெறும் குற்றவாளி!

கனடா கியுபெக் நகரில் பள்ளிவாசலில் 6 பேரை கொன்ற குற்றவாளிக்கு 150 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜகவரி 29 ஆம் திகதி கனடமா கியுபெக் நகரில் உள்ள இஸ்லாமிய கலாச்சார மத்திய நிலையத்திற்குள் நுழைந்த,அலெக்சான்ரே பிசொன்னெட் என்ற நபர் அங்கு பிரார்த்தணையில் ஈடுபட்டவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதன் காரணமாக 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 5 பேர் காயம் அடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்மீது நடைபெற்று வந்த வழக்கில், கடந்த புதன் கிழமை, ஒரு கொலைக்கு 25 ஆண்டுகள் தண்டனை மூலம், 6 கொலைக்கு 150 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுவே கனடா நாட்டில் முதன் முதலாக வழங்கப்பட்ட நீண்ட தண்டனை என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

About இனியவன்

x

Check Also

நாடு கடத்தும் தீர்ப்பு வெளியாகியும் அதிர்ச்சி அடையாத விஜய்மல்லையா

என்னை நாடு கடத்துவது தொடர்பாக லண்டன் கோர்ட் அளித்த தீர்ப்பினால் அதிர்ச்சி அடைய ஏதுமில்லை என விஜய் மல்லையா குறிப்பிட்டுள்ளார். ...

%d bloggers like this: