Home / கட்டுரைகள் / வரலாற்றில் இன்று: ஜனவரி 11 RADIOTAMIZHA

வரலாற்றில் இன்று: ஜனவரி 11 RADIOTAMIZHA

1911 : காம்ரேட் என்ற பத்திரிகையை விடுதலைப் போராட்ட வீரர் மௌலானா முகம்மது அலி கல்கத்தாவில் வெளியிட ஆரம்பித்தார்.

1911 : சானா, இலங்கை நாடகாசிரியர், வானொலி நாடகக் கலைஞர் பிறந்த தினம்.

1922 : நீரிழிவுக்கு மருந்தாக மனிதரில் இன்சுலின் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.

1923 : முதலாம் உலகப் போரில் ஏற்பட்ட இழப்பீடுகளைப் பெறும் பொருட்டு, பிரான்சு, பெல்ஜியம் ஆகிய நாடுகளின் படையினர் ஜேர்மனியின் ரூர் பகுதியைக் கைப்பற்றினர்.

1935 : ஹவாயில் இருந்து கலிபோர்னியா வரை தனியாகப் பறந்த முதல் மனிதர் என்ற சாதனையை அமேலியா ஏர்ஃகாட் பெற்றார்.

1942 : இரண்டாம் உலகப் போர் – ஜப்பானியர் டச்சு கிழக்கிந்தியாவின் போர்ணியோவில் தரக்கான் தீவைக் கைப்பற்றினர்.

1942 : இரண்டாம் உலகப் போர் – ஜப்பான் கோலாலம்பூரைக் கைப்பற்றியது.

1946 : கம்யூனிசத் தலைவர் என்வர் ஓக்சா அல்பேனியாவின் அரசுத் தலைவராகத் தன்னை அறிவித்து அதனைக் குடியரசாக்கினார்.

1957 : ஆப்பிரிக்க உடன்பாடு டக்கார் நகரில் எட்டப்பட்டது.

1962 : பனிப்போர் – சோவியத் நீர்மூழ்கி பி-37 தீப்பிடித்து அழிந்தது.

1962 : பெருவில் இடம்பெற்ற சூறாவளி காரணமாக 4,000 பேருக்கு மேல் இறந்தனர்.

1966 : இந்திய-பாக்கிஸ்தான் போரை முடிவுக்குக் கொண்டு வந்த தாஷ்கந்து வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட, இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி தாசுக்கந்து நகரில் மாரடைப்பால் காலமானார்.

1972 : கிழக்குப் பாக்கிஸ்தான் வங்காளதேசம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1994 : அயர்லாந்து அரசு ஐரியக் குடியரசு இராணுவம் மற்றும் அதன் அரசியல் அமைப்பான சின் பெயின் ஆகியவற்றின் ஒலிபரப்புகள் மீதான 15 ஆண்டுகள் தடையை நீக்கியது.

1998 : அல்ஜீரியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

2007 : செயற்கைக் கோள் தகர்ப்பு ஏவுகணைச் சோதனையை சீனா நடத்தியது.

2013 : சோமாலியாவில் பணயக் கைதியாக வைக்கப்பட்டிருந்த பிரெஞ்சு நபர் ஒருவரை விடுவிக்க எடுத்த முயற்சியில் ஒரு பிரெஞ்சுப் படைவீரரும், 17 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். ஆனாலும் இம்முயற்சி வெற்றியளிக்கவில்லை.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | வரலாற்றில் இன்று: மார்ச் 19

நிகழ்வுகள் 1279 – யாமென் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் மங்கோலியாவின் வெற்றியுடன் சீனாவில் சோங் அரச பரம்பரை முடிவுக்கு ...

%d bloggers like this: