Home / கட்டுரைகள் / வரலாற்றில் இன்று: ஜனவரி 09 RADIOTAMIZHA

வரலாற்றில் இன்று: ஜனவரி 09 RADIOTAMIZHA

1431 : பிரெஞ்சு வீரப் பெண்ணான ஜோன் ஒவ் ஆர்க் மீதான முன் விசாரணைகள் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தில் ஆரம்பமானது.

1707 : ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்து பேரரசுகளை இணைக்க இங்கிலாந்து நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

1760 : பராய் காட் சமரில் மராட்டியர்களை ஆப்கானியர்கள் தோற்கடித்தனர்.

2015: ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும் பதவியேற்றனர்

1768 : பிலிப் ஆஸ்ட்லி என்பவர் முதன் முதலாக நவீன சர்க்கஸ் காட்சியை லண்டனில் நடத்தினார்.

1793 : ஜோன் பியர் பிளன்சர் வெப்ப வாயூ பலூனில் பறந்த முதல் அமெரிக்கரானார்.

1799 : பிரித்தானியப் பிரதமர் வில்லியம் பிட் நெப்போலியனுக்கெதிரான போருக்கு நிதி சேர்ப்பதற்காக வருமான வரியை அறிமுகப்படுத்தினார்.

1816 : ஹம்பிறி டேவி சுரங்கத் தொழிலாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட டேவி விளக்கை வெற்றிகரமாகப் பரிசோதனை செய்தார்.

1857 : அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 7.9 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டது.

1858 : டெக்சாஸ் குடியரசின் கடைசி ஜனாதிபதி அன்சன் ஜோன்ஸ் தற்கொலை செய்து கொண்டார்.

1861 : அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்க முன்னர் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து இரண்டாவது மாநிலமாக மிசிசிப்பி பிரிந்தது.

1878 : இத்தாலியின் மன்னனாக முதலாம் உம்பேர்ட்டோ முடி சூடினார்

1905 : ரஷ்யத் தொழிலாளர் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் குளிர்கால அரண்மனையை முற்றுகையிட்டனர். சார் மன்னரின் படைகள் பலரைச் சுட்டுக் கொன்றனர் (ஜூலியன் நாட்காட்டியின் படி). இந்நிகழ்வே 1905 ரஷ்யப் புரட்சி ஆரம்பமாவதற்கு வழிகோலியது.

1921 : புனித ஜோர்ஜ் கோட்டையில் சென்னை சட்டமன்றத்தின் முதலாவது கூட்டம் நடைபெற்றது.

1951 : ஐநாவின் தலைமையகம் நியூயோர்க் நகரில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

1964 : பனாமா கால்வாயில் பனாமாவின் தேசியக்கொடியை இளைஞர்கள் ஏற்ற முயன்ற பின்னர் அமெரிக்கப் படைகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் சமர் மூண்டது. 21 பொதுமக்களும் 4 படையினரும் கொல்லப்பட்டனர்.

1972 : ஹொங்கொங்கில் குயின் எலிசபெத் கப்பல் தீக்கிரையானது.

2007: அப்பிள் நிறுவனத்தின் முதலாவது ஐபோனை ஸ்டீவ் ஜொப்ஸ் வெளியிட்டார்

1974 : யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு முடிவடைந்தது.

1990 : நாசாவின் கொலம்பியா விண்ணோடம் ஏவப்பட்டது.

1991 : லித்துவேனியாவின் சுதந்திரக் கோரிக்கையை நசுக்குவதற்காக சோவியத் ஒன்றியம் வில்னியூஸ் நகரை முற்றுகையிட்டது.

2001 : சீனாவின் ஷென்சூ 2 விண்கலம் ஏவப்பட்டது.

2005 : சூடான் அரசுக்கும் சூடான் மக்கள் விடுதலை இயக்கத்துக்கும் இடையில் அமை ஒப்பந்தம் கென்யாவில் கைச்சாத்திடப்பட்டது.

2007: அப்பிள் நிறுவனத்தின் முதலாவது ஐபோனை அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்டீவ் ஜொப்ஸ் வெளியிட்டார்.

2011: ஈரானில் இடம்பெற்ற விமான விபத்தில் 77 பேர் உயிரிழந்தனர்.

2013: அமெரிக்காவின் நியூயோர்க்கில் படகொன்று விபத்துக்குள்ளானதால் 85 பேர் காயமடைந்தனர்.

2015: இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுள்ள 6 ஆவது ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவும் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும் பதவியேற்றனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | வரலாற்றில் இன்று ஜூன் 29

நிகழ்வுகள் 1534 – பிரின்ஸ் எட்வேர்ட் தீவு சாக் கார்ட்டியே என்ற ஐரோப்பியரால் கண்டுபிடிக்கப்பட்டது. 1613 – லண்டனில் உள்ள ...

%d bloggers like this: