Home / உள்நாட்டு செய்திகள் / வரணி கண்ணகை அம்மன் ஆலய விவகாரம்- வழக்கு தொடர தீர்மானம்!!

வரணி கண்ணகை அம்மன் ஆலய விவகாரம்- வழக்கு தொடர தீர்மானம்!!

யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு காரணமாக திருவிழாவை நிறுத்தியவர்களுக்கு எதிராக ஊர் மக்களுடன் இணைந்து நீதிமன்றில் வழக்கு தொடர்வதற்கு அகில இலங்கை சைவ மகா சபை தீர்மானித்துள்ளது.

கடந்த வருட திருவிழாவின் போது ஒரு சமூகத்தினர் வடம் பிடித்து தேர் இழுக்கக்கூடாது என்பதற்காக ஜே.சி.பி கனரக இயந்திரத்தின் மூலம் தேர் இழுந்து அனைத்துலக சைவத் தமிழ் மக்களுக்கும் அவமானத்தை சிலர் ஏற்படுத்தினர்.

இந்த வருட திருவிழாவுக்கான ஏற்பாடாக, தென்மராட்சிப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் எந்தவித வேறுபாடுகளும் இன்றி திருவிழாவை நடத்துமாறு ஆலய நிர்வாகத்தினரிடம் கோரப்பட்டது.

எனினும், ஆலய நிர்வாகத்தினர் திடீரென திருவிழாவை நிறுத்தியுள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!!

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய் சப்ரகமுவ ...

%d bloggers like this: