Home / உள்நாட்டு செய்திகள் / வத்தளையில் போலி ஆவணங்களைத் தயாரித்த நிலையமொன்று சுற்றிவளைப்பு..!!

வத்தளையில் போலி ஆவணங்களைத் தயாரித்த நிலையமொன்று சுற்றிவளைப்பு..!!

வத்தளை – கல்யாணி மாவத்தை பகுதியில் போலி ஆவணங்களைத் தயாரித்த நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வத்தளை, கனேமுல்ல மற்றும் மருதங்கடவல பகுதிகளைச் சேர்ந்தவர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரச அதிகாரிகள், காணிப் பதிவாளர் அலுவலகம், சட்டத்தரணி, அதிபர், இலங்கை துறைமுக அதிகார சபை, திருமண பதிவாளர், கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலாளர் ஆகியோரின் முத்திரைகளைப் பயன்படுத்தி, போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த சுற்றிவளைப்பில், போலி ஆணவங்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வெலிகந்த – அசேலபுர பகுதியில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதி விபத்து..!!

மட்டக்களப்பு மற்றும் கொழும்பிற்கு இடையிலான ரயில் மார்க்கத்தின் அசேலபுர பிரதேசத்தில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதியுள்ளன. ரயில் என்ஜினில் அகப்பட்டு ...

%d bloggers like this: