Home / உள்நாட்டு செய்திகள் / வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்தும் கொடுக்கும் பணி ஆரம்பம்

வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்தும் கொடுக்கும் பணி ஆரம்பம்

வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்தும் கொடுக்கும் பணிகள் நாளை 12.01.19 சம்பிரதாய பூர்வமாக ஆரம்பிக்கப்படும் என்று தேசிய வீடமைப்பு அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு வீடுகளை அமைத்தல் மற்றும் திருத்தப் பணிகளை ஆரம்பித்து வைப்பதற்காக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் எல்.எஸ் .பலந்தூரிய வடக்குக்கு வருகை தரவுள்ளார்.

வடக்கில் அண்மையில் பெய்த மழையால் கிளிநொச்சி, முல்லைத்ததீவு உள்ளிட்ட வடக்கின் பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கின. பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் குடியிருப்புக்களின் எண்ணிக்கை தொடர்பில் பிரதேச மற்றும் மாவட்டச் செயலகத்தினர் கணக்கெடுப்புக்களை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இதன் படி சுமார் 3 ஆயிரத்து 600 வீடுகள் வரை புதிதாக அமைத்து கொடுக்க வேண்டியுள்ளதாக கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டது.

வீடுகள் முற்றாக சேதம் அடைந்தவர்கள் மற்றும் பகுதி அளவில் சேதம் அடைந்தவர்களும் உள்ளனர். இவர்களுக்கான புதிய வீடுகளை 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபா செலவில் அமைத்து கொடுப்பதாகவும், திருத்து செலவுகளை வழங்குவதாகவும் அரசு அறிவித்திருந்தது.

அதற்கமைவாக கிளிநொச்சி மாவட்டத்தில் உமையாள்புரம், முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.

 

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | நாவலப்பிட்டிய மக்கள் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு

பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் கீழ் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ...

%d bloggers like this: