Home / உலகச் செய்திகள் / லண்டன் உக்ரைன் தூதரக வளாகத்தில் நிகழ்ந்த பரபரப்பான சம்பவம்!!

லண்டன் உக்ரைன் தூதரக வளாகத்தில் நிகழ்ந்த பரபரப்பான சம்பவம்!!

லண்டனில் உள்ள உக்ரேய்ன் தூதரக வாசலில் நிறுத்தப்பட்டிருந்த தூதரின் கார் மீது தனது காரை இருமுறை மோதிய நபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்துள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. உக்ரைன் தூதரின் கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் வேகமாக தனது காரில் வந்த ஒருவன், தூதரின் காரை மோதி தாக்கினான். இது தற்செயல் விபத்து போல் தெரிந்தாலும் மீண்டும் அவன் இதே போல் காரை மோதியபோதுதான் போலீசார் விபரீதம் உணர்ந்து வேகமாக களமிறங்கினர்.

தாக்கியவனின் கார் தப்ப முடியாதபடி நாலாபக்கமும் போலீசார் சூழ்ந்துக் கொண்டு சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதையடுத்து அவன் போலீசாரிடம் சரண் அடைந்தான்.விசாரணையில் அவன் மேலும் பல வாகனங்கள் மீது காரை மோதி சேதப்படுத்தியதும் தெரியவந்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

மின்னல் தாக்கி 8 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக பலி-10 குழந்தைகள் படுகாயம்!!

பீகாரில் விளையாடிக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் 8 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். பீகார் மாநிலத்தில் பருவமழை தீவிரம் ...

%d bloggers like this: