Home / இந்திய செய்திகள் / லண்டனில் நிரவ் மோடி: இந்தியாவிடம் ஒப்படைக்க கோரிக்கை

லண்டனில் நிரவ் மோடி: இந்தியாவிடம் ஒப்படைக்க கோரிக்கை

வங்கி மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடிலண்டனில் இருப்பது உறுதியாகியுள்ளதைத் தொடர்ந்து அவரை இந்திய அரசிடம் ஒப்படைக்க சிபிஐ கோரியுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.15,000 கோடி கடன் மோசடி செய்த குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி, வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்று தலைமறைவாக உள்ளார்.

அவரை கைது செய்து இந்தியா கொண்டு வர சிபிஐ, அமலாக்கத்துறை போராடி வருகிறது. அவரது பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டு இருப்பிடத்தை அறிய உதவி கோரப்பட்டது. இதனையடுத்து, நிரவ் மோடி பல போலி பாஸ்போர்ட்களை பயன்படுத்த ஆறு நாடுகளுக்குச் சென்றிருக்கிறார் என்றும் பெல்ஜியத்தில் பதுங்கியுள்ளார் என்றும் கடந்த ஜூன் மாதம் தகவல் கிடைத்தது.

இந்நிலையில், நிரவ் மோடி லண்டனில் இருப்பது உறுதியாகியுள்ளதாக சிபிஐக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து உடனடியாக உள்துறை அமைச்சகத்திடம் நிரவ் மோடியை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்காக கோரிக்கை விடுத்துள்ளது.

About இனியவன்

x

Check Also

இன்று காலை சபரிமலை நடைப்பந்தல் வரை சென்றுள்ள 2 பெண்கள் : பக்தர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை

சபரிமலை : சபரிமலையில் ஐயப்பனை தரிசிப்பதற்காக தெலுங்கானாவைச் சேர்ந்த தனியார் டிவி செய்திவாசிப்பாளர் கவிதா மற்றும் கொச்சியை சேர்ந்த இருமுடி ...

%d bloggers like this: