Home / உலகச் செய்திகள் / ரொறொன்டோவில் குப்பைதொட்டி மீது விழுந்த நபர் பலி!

ரொறொன்டோவில் குப்பைதொட்டி மீது விழுந்த நபர் பலி!

ரொறொன்டோவில் காண்டொ என அழைக்கப்படும் குடியிப்பு கட்டிடத்தின் ஒன்றின் 9ஆவது தளத்திலிருந்து குப்பை தொட்டி மீது விழுந்த நபர் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து ரொறொன்டோ பொலிஸார் தெரிவிக்கையில், எர்ஸ்கின் அவென்யூவிலுள்ள ஒரு குடியிப்பு கட்டிடத்தின் 9 ஆவது தளத்திலிருந்து சுமார் 30 வயதான நபர் கீழ் உள்ள குப்பை தொட்டி மீது விழுந்து பலியாகியுள்ளார்.

இது குறித்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் அவசர சேவை பிரிவிற்கு அழைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த மரணம் குறித்து எதுவித காரணமும் இதுவரை கண்டறிப்படவில்லை எனவும் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் பொலிஸார் தெரித்துள்ளனர்.

About இனியவன்

x

Check Also

ஜப்பானின் சப்போரோ நகரில் பாரிய வெடிவிபத்து

ஜப்பானின் சப்போரோ நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 42-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.  சப்போரோ: ஜப்பானின் சப்போரோ ...

%d bloggers like this: