Home / உலகச் செய்திகள் / ரஷ்யாவின் கொவிட்-19 தடுப்பு மருந்து பாதுகாப்பானது

ரஷ்யாவின் கொவிட்-19 தடுப்பு மருந்து பாதுகாப்பானது

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பு மருந்து பாதுகாப்பானது என முதற்கட்டச் சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக் தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்திச் சோதனை நடைபெற்று வருகிறது.

இதன் முதற்கட்டச் சோதனை முடிவுகள் பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் ‘த லான்செட்’ மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

சோதனையில் 42 நாட்களாகக் கிடைத்த தரவுகளின்படி வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில், ‘நோயைக் குணப்படுத்துவதற்கான பிறபொருளெதிரியை 21 நாட்களில் தூண்டுவதாகவும், இந்த மருந்தைச் செலுத்தியதில் எந்த எதிர்மறை விளைவுகளும் ஏற்படவில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 76 பேருக்கு மருந்து செலுத்தப்பட்டதில், மிகவும் பாதுகாப்பானது எனத் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. உறைந்த நிலையில் உள்ள மருந்து, உறைந்து உலர்ந்த நிலையில் உள்ள மருந்து என இருவகையில் செலுத்திப் பார்க்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

உறைந்த மருந்து பெருமளவில் தயாரித்துப் பயன்படுத்தவும், உலக அளவில் விற்பனை செய்வதற்கும் ஏற்றது எனக் கருதியுள்ளனர். உறைந்து உலர்ந்த நிலை மருந்தை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பராமரிக்க வேண்டும் என்பதால் இதைப் பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்துச் செல்ல முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த மருந்துகள் ரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் செல்லும்போது ஆன்டிபாடி, டி செல் ஆகிய இருவகைகளிலும் உடலின் நோய் எதிர்ப்பாற்றலைத் தூண்டிக் கிருமியைத் தாக்கி அழிப்பதாகவும் ஆய்வுக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, சீனா உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அவை பல்வேறு கட்டங்களாக மனிதர்களின் உடலில் செலுத்தி சோதித்துப் பார்க்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், உலகிலேயே முதல் முறையாக கொவிட்-19 தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யாவின் செஷெனோவ் பல்கலைக்கழகம் கடந்த ஜூலை மாதம் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

About VITHUSHA

x

Check Also

பிரான்ஸில் கொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம் மேலதிக தகவல்

பிரான்ஸில் நேற்று இலங்கை குடும்பம் ஒன்று அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. Noisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் ...