Home / உள்நாட்டு செய்திகள் / ரயிலில் மோதுண்டு உயிரிழந்த மூன்று பேரும் கொட்டாஞ்சேனையை சேர்ந்தவர்கள்

ரயிலில் மோதுண்டு உயிரிழந்த மூன்று பேரும் கொட்டாஞ்சேனையை சேர்ந்தவர்கள்

கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் நேற்றிரவு ரயிலில் மோதுண்டு உயிரிழந்த மூன்று பேரும் கொட்டாஞ்சேனையை சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

கொட்டாஞ்சேனை – பரமானந்த விஹாரை வீதியை சேர்ந்தவர்களே ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளனர்.

32 வயதான தாயொருவரும், 8 மற்றும் 12 வயதான பிள்ளைகளுமே ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

கொள்ளுப்பிட்டி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

கோட்டாபய நாளை காலை அனுராதபுரத்தில் பதவிப் பிரமாணம்

இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ நாளை காலை அநுராதபுரம் ஜயசிறி மஹா போதிக்கு அருகாமையில் பதவிப் ...

%d bloggers like this: