Home / உள்நாட்டு செய்திகள் / ரஞ்சனுக்கு எதிரான மற்றுமொரு வழக்கு விசாரணை

ரஞ்சனுக்கு எதிரான மற்றுமொரு வழக்கு விசாரணை

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு சம்பந்தமாக முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றுமொரு வழக்கை எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் ரஞ்சன் ராநாயக்க, அப்போது உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த முன்னாள் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் சம்பந்தமாக வெளியிட்ட கருத்து மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்கள் கொண்ட அமர்வில் மூன்று நீதியரசர்கள் தமது தரப்புக்கு சாதகமான தீர்ப்பை வழங்குவார்கள் என ரஞ்சன் ராமநாயக்க அப்போது குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதியரசர் சிசிர ஆப்ரூ தலைமையிலான நீதியரசர்கள் அமர்வு முன் விசாரணைக்கு எடுக்கப்பட்டதுடன் அப்போது வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

About VITHUSHA

x

Check Also

கிளிநொச்சியில் மறைத்து வைத்திருந்த வாள்கள்

கிளிநொச்சி- பளை, முல்லையடி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மூன்று வாள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. ஏ9 வீதிக்கு அருகாமையில், மின்சார ...